62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட நடராஜர் சிலை கண்டுபிடிப்பு!!
தஞ்சை வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட 2000 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை அமெரிக்காவின் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் உள்ள அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற முனிவர்கள் தரிசித்து இறைவனின் பெருமையைப் பாடிய திருக்கோயில் என பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிலையில் வேதபுரீஸ்வரர் கோவிலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு புகந்த மர்ம நபர்கள் அங்கு பக்தர்களால் வனங்கப்பட்ட வந்த பழங்கால நடராஜர் சிலை திருடிச் சென்று உள்ளனர்.
இது தொடர்பாக திருவேதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சம்மந்தம் சேதுராயர் மகன் சு.வெங்கடாசலம், என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஐடபிள்யூசிஐடி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இ ந்த வழக்கின் விசாரணையை ஐ.டபிள்யூ.சி.ஐ.டி., கும்பகோணம் ஆய்வாளர் டி.எம்.டி. இந்திரா தலைமையிலான குழுவினர் விசாரணை செய்ததில் இந்த புகார் உண்மையானது என கண்டுபிடித்தனர்.
இதனையடித்து புதுச்சேரியின் இந்தோ- பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்து நடராஜர் சிலையின் புகைப்படத்தை வைத்து சோதனை நடத்தினர். அப்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் திருடு போன நடராஜர் சிலை இருப்பதை சிலை கடத்தல் தடுப்புபிரிவின் விசாரணை குழுவினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து உள்துறை அமைச்சகத்தின் மூலமாக நடராஜர் சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.