undefined

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

 

கல்யாணமான புதுமண தம்பதியரை ஆடி மாசத்துல ஏன் பிரிச்சு வைக்கறாங்க தெரியுமா? நம் முன்னோர்கள் இதற்கான காரணங்களையும் சொல்லி வைத்திருக்கிறார்கள். காரணங்கள் இல்லாமல் நம் இந்து  மதமும் எதையும் வலியுறுத்தவில்லை. இந்து மதம் வலியுறுத்தி செய்யச் சொல்கிற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும், நம், நம் சந்ததியினரின் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது. பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தங்கள் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கும்.

பிறந்த போது ஆரோக்கியம், படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், குழந்தைப்பேறு, செல்வம் என தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு வரும் முதல் ஆடி மாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது நம் பாரம்பரியத்தில் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த சமயத்தில் பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். ஆடியில் தாம்பத்ய வாழ்க்கையை தவிர்க்க வேண்டும். தம்பதியர் கூடினால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் .

சித்திரையில் பிள்ளை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என ஊர்ப்பக்கம் சொல்வது வழக்கம். அங்காரகனுக்கும், ஆதவனுக்கும் தந்தைக்குரிய யோக பலம் பெற்ற நாளில் முறையாகப் பரிகாரங்களைச் செய்தால். பெற்றோர்களுக்குரிய தோஷங்கள் விலகி விடும் என்பதையும் சொல்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள்.

ஆடியில் தம்பதியர் சேர்ந்திருந்தால், சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த காலங்களில் விஞ்ஞான வசதிகள் இத்தனை கிடையாது. போக்குவரத்து வசதிகளும் மலை கிராமங்களிலோ, தொலைத்தூர கிராமங்களிலோ இல்லை. விஞ்ஞான ரீதியாக சித்திரையில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், நல்ல சித்திரை வெயில் நேரங்களில், குழந்தைக்கும், தாய்க்கும் கஷ்டம் அதிகம் இருக்கும். கர்ப்பிணி பெண்கள் அதிக சிரமத்திற்குள்ளாவார்கள். பிறந்த குழந்தைகளுக்கு பெருமளவு உடல்நலக்குறைபாடு ஏற்படலாம் என்பதால் இந்த சொலவடை சொல்லியிருக்கலாம் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும் விளக்கம் அளிக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை