undefined

ரூ.7 லட்சம் மதிப்புள்ள 90 ஆடுகள் திருட்டு... இளைஞர் கைது!

 

தூத்துக்குடி  மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ரூ.7 லட்சம் மதிப்புள்ள 90 ஆடுகளை அடுத்தடுத்து திருடியதாக தோட்டத்தின் காவலாளியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் கணபதி (70). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் ஆடுகளை அங்குள்ள முருகன் என்பவர் தோட்டத்தில் கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார்.

இதில் கடந்த மாதம் 31ம் தேதி முதல் நவம்பவர் 2ம் தேதி வரை 90 ஆடுகள் திருடுப் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடுகளின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் கணபதி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

போலீசாரின் விசாரணையில் அதே தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈராட்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவி (30) என்பவர் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!