9 கிலோ கஞ்சா பதுக்கல்.. 2 ரயில்வே போலீசாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் கடந்த 3 ம் தேதி ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் பணி புரியும் சந்துரு, மணிகண்டன், ஆகிய இரண்டு ரயில்வே போலீசாரும், 4வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாரின் சோதனைக்கு பயந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் பையை பிளாட்பாரத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.
இதனால் பையை ரோந்து பணியில் இருந்த இரண்டு ரயில்வே போலீசார் சோதனை செய்ததில் அதில் பண்டல்களாக கட்டப்பட்டு 9 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சந்துரு மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் பதுக்கியதாக தெரிகிறது.
பின்னர் இது குறித்து ரயில்வே எஸ்.பி ஈஸ்வரன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்று இருவரையும் விசாரணை வளையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் 9 கிலோ கஞ்சாவை பதுக்கியது தெரியவந்தது. பின்னர் ரயில்வே எஸ். பி. ஈஸ்வரன் அதிரடி நடவடிக்கையாக சந்துரு, மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!