உஷார் மக்களே... இந்தியாவில் சாண்டிபுரா வைரசால் 82 பேர் பலி... உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
உலகம் முழுவதும்கொரோனாவுக்கு அடுத்தபடியாக தற்போது பல நாடுகளில் குரங்கம்மை வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் சாண்டி புரா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் குரங்கமை வைரஸ் தொற்று இல்லை என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் 1965ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாண்டி புரா பகுதியில் முதன்முறையாக இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இதனால்தான் அதற்கு சாண்டிபுரா வைரஸ் தொற்று எனப் பெயரிடப்பட்டது. தற்போது இந்த வைரஸ் தொற்று மீண்டும் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அந்த வகையில் இந்தியா முழுவதும் 42 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு இருந்தால் உடனடியாக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த வைரஸ் தொற்று பாதித்தால் காய்ச்சல், வாந்தி, நரம்பியல் குறைபாடுகள், மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். குறிப்பாக இந்த வைரஸ் தொற்றால் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரங்களில் உயிரிழந்த்து விடுகின்றனர். எனவே இந்த வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருந்தால் உடனடியாக மக்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இதுவரை 82 பேர் இந்தியாவில் சாண்டிபுரா வைரசினால் உயிரிழந்து இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!