undefined

அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை!!

 

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
 இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  நேற்று பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.  

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை  பெய்து வருகிறது. இந்த மழை மேலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “இலங்கை மற்றும் அதன் கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது.  வங்கக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்ச நிலவுகின்றது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி,திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

 நவம்பர் 5ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளதுசென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!