சபரிமலையில் ஒரே நாளில் 77000 பேர் சாமி தரிசனம்!
சபரிமலை ஐயப்பான் கோவில் நவம்பர் 15ம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. நவம்பர் 16ம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட நெரி சலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்கத் தேவையன்றி உடனடி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவதால் பதினெட்டாம்படி உட்பட சன்னிதான பகுதியில் கூட்ட நெரிசல் என்பது இல்லை. நேற்று ஒரே நாளில் மட்டும் 77000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.இதில் 9254 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும் அதற்கேற்றவாறு நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!