பெண்ணின் தலையில் சின்ன சின்னதா 77 ஊசிகள்... அதிர்ச்சி!
ஒடிசா மாநிலம் போலாங்கிர் பகுதியில் வசித்து வருபவர் 19 வயது ரேஷ்மா பெஹரா . இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். 4 ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்து விட்டதாகவும் அதன் பிறகு அடுத்தடுத்து உடல்நல பாதிப்புகள் ஏற்பட தொடங்கியதாகவும் தெரிகிறது. தாயார் மறைவுக்கு பிறகு இவர் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். இந்நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு பீமா போய் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரேஷ்மா அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து விம்சார் மருத்துவமனை இயக்குநர் பாப்ராஹி ரத் கூறுகையில், இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் 77 ஊசிகள் பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக ஊசிகள் எதுவும் எலும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். மருத்துவர்களிடம் இது குறித்து ரேஷ்மா “தாயின் மறைவுக்கு பின் மனதளவில் பாதிக்கப்பட்டேன். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மந்திரவாதியிடம் சென்றபோது அடுத்தடுத்து அவர் தொடர்ந்து ஊசிகளை எனக்கு ஏற்றிவிட்டார்” எனக் கூறினார். இதனை கேட்டு டாக்டர்கள் அதிர்ந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரேஷ்மா போன்று வேறு யார்யார் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறித்து காந்தபாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா