75லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள்.... மத்திய அரசு அதிரடி!!
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது. இறுதியில் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்லது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் , அதிபர்கள் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் “ ஜி20 மாநாட்டிற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உக்ரைன் தொடர்பான கூட்டறிக்கை இந்தியாவின் பலத்தை நிரூபிப்பதாக உள்ளது.
அத்துடன் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில் 75 லட்சம் காஸ் இணைப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!