undefined

7,360 ஹெக்டர் நாசம்... 140 ரயில்கள் ரத்து... தெலுங்கானா, ஆந்திராவில் இன்றும் கனமழை எச்சரிக்கை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

 
கனமழை ரயில் பாலம்

தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் நேற்று பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இரு மாநிலங்களிலும், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆயிரக்கணக்கான மக்களை நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.

இரு மாநிலங்களின் பல மாவட்டங்களில் இன்றும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் பேசி, மத்திய அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்று உறுதியளித்தனர்.

தெலுங்கானா மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா மாநில வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார். சூர்யாபேட்டை, பத்ராத்ரி கொத்தகுடேம், மஹ்பூபாபாத் மற்றும் கம்மம் ஆகிய இடங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை அவசர ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதற்கிடையில், ஹைதராபாத்திலும் கனமழை பெய்ததால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று செப்டம்பர் 2ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. 

குஜராத் கனமழை

தெலுங்கானாவில், சில மாவட்டங்களில் நிலைமை மோசமாகலாம். தெலுங்கானாவின் அடிலாபாத், நிஜாமாபாத், ராஜன்னா சிர்சில்லா, யாதாத்ரி புவங்கிரி, விகாராபாத், சங்கரெட்டி, காமரெட்டி மற்றும் மகபூப்நகர் மாவட்டங்களில் இன்று செப்டம்பர் 2ம் தேதி காலை 8.30 மணி வரை மிக கனமழை முதல் மிக கனமழை வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திராவில் பல இடங்களில் மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீகாகுளம், விஜயநகரம், பார்வதிபுரம் மன்யம், அல்லூரி சீதாராம ராஜு, காக்கிநாடா மற்றும் நந்தியாலா மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.

விஜயவாடா மற்றும் குண்டூர் நகரங்கள் முற்றிலும் மாயமாகி விட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். கனமழையால் விஜயவாடா, குண்டூர் நகரங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. விஜயவாடா-குண்டூர் தேசிய நெடுஞ்சாலை காஜாவிலும், விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் ஜக்கையாபேட்டையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜக்கையாபேட்டையில் 24 மணி நேரத்தில் 26 செ.மீ மழையும், 14 மண்டலங்களில் 20 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

முதல்வர் கூறுகையில், கொள்ளேறு ஏரிக்கு திருப்பி விடப்பட வேண்டிய வெள்ள நீர், விஜயவாடா நோக்கி திரும்பியது. "நாங்கள் பிரகாசம் தடுப்பணைக்கு கீழே மணல் மூட்டைகள் மற்றும் பிற வழிகளில் வலுவூட்டல்களை செய்து வருகிறோம், மேலும் மாவட்ட ஆட்சியர்களை எச்சரித்தோம்" என்று நாயுடு கூறினார்.

17,000 பேர் 107 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார். 1.1 லட்சம் ஹெக்டேர் விவசாய வயல்களும், 7,360 ஹெக்டேர் தோட்டக்கலை வயல்களும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விஜயவாடா கோட்டத்தையும் உள்ளடக்கிய செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரயில்வே மண்டலம் நேற்று 140 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் 97 ரயில்களை திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 26 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் ஏற்கனவே 12 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 குழுக்கள் அனுப்பப்படுகின்றன.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா