இன்று தமிழகம் முழுவதும் 600 கூடுதல் சிறப்பு பேருந்துகள்!!

 

தென் மாவட்டங்களில் இருந்து பலர் பணிக்காக சென்னையில் தங்கியுள்ளனர் . இவர்கள் அனைவரும் வார விடுமுறை பண்டிகை காலங்களுக்கு சொந்த ஊர் சென்று திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது. ரயில் டிக்கெட்டுகளை பொறுத்தவரை தொடங்குவதற்கு முன்பே முன்பதிவு முடிந்துவிடுகிறது. ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகம் . இவர்களின்பயணங்கள் அரசு பேருந்துகளை நம்பியேஅமைந்துள்ளது. வார விடுமுறைகளில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிகள் மற்றும் தேவைகளுக்காக சிறப்பு பேருந்துகளை வாரா வாரம் அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கி வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.சென்னையில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருச்சி  பகுதிகளில் இருந்து பிற இடங்களுக்கு 300 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நாளை மற்றும் நாளை மறுநாள்  2 நாட்கள் தொடர்  விடுமுறை நாட்கள் என்பதால், வார இறுதி நாளான இன்று பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு போக ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.  நடப்பு வாரத்தை பொறுத்தவரை வார இறுதியில் பயணிக்க இதுவரை 5,303 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினத்திலும்   சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது.மேலும்   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9ம் தேதி முதல் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!