நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்து ... ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கொடடா தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பழுதாகி விட்டது. இதன் காரணமாக சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வழியாக 10 பேருடன் வந்த கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அத்துடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சந்தர்ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஆந்திராவின் குணடலா அருகே உள்ள தேவாலயத்தில் முடி காணிக்கை செய்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆலயத்துக்கு சென்று விட்டு திரும்பும் போது நடந்த இந்த விபத்து உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!