6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று   ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு  6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீலகிரி, கோவை, நாகை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி  மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நாளை ஜூலை 9 முதல் 12 வரை  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஜூலை 13ம் தேதி  தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!