பத்திரம் மக்களே... கர்நாடகாவில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை!

 
 

கர்நாடகாவில் இன்று முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, பெல்காம், பிதர், கலபுர்கி, யாதகிரி, சிக்கமகளூரு, ஷிமோகாவில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தார்வாட், கடக், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர், விஜயப்பூர், பெல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு மாநகர், சித்ரதுர்கா, தாவங்கரே, ஹாசன், குடகு, மாண்டியா, கோலார், ராமநகரா, தும்கூர் ஆகிய இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
 கர்நாடகாவின் தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, பெல்காம், பிதார், கலபுர்கி, யாதகிரி, சிக்கமகளூரு, ஷிமோகா ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று அதிகாலை முதலே யல்லாபூர், அடைக்கி, கமலாப்பூர், கொப்பா, ஹூஞ்சடகத்தே, பாலேஹொன்னூர், கம்மரடி, ஹாலியால, ஜேவர்கி, கூடலசங்கமா, கஜூரி, ஆனவட்டி, மூர்நாடு, நாபோக்லு ஆகிய இடங்களில் மழை பெய்து வருவதால் அந்த பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!