பாஜக எம்.எல்.ஏ., முன்னிலையில் மெகா மோசடி... தங்கையைத் திருமணம் செய்த அண்ணன்... தாலியைக் கழற்றிவிட்டு மீண்டும் திருமணத்திற்கு தயாரான ஜோடிகள்!

 

அரசு சார்பில் ஒரே நேரத்தில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. இதில் பல ஜோடிகள் பணத்திற்காக நடிக்க வந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர்  சமூக திருமண திட்டத்தின் கீழ் விதவைகள், விவாகரத்து மற்றும் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரசாங்கம் திருமணங்களை நடத்தி வைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களும்  பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.35,000 ரொக்கமாக டெபாசிட் செய்யப்படுகிறது.

அதுதவிர   உடைகள், நகைகள், பாத்திரங்கள் உட்பட திருமண சீர்வரிசைப் பொருட்களுக்காக ரூ10,000 , நிகழ்ச்சிக்காக ரூ.6,000 பணமும் ஒவ்வொரு ஜோடிக்கும் வழங்கப்படுகிறது.  
 இந்த சமூக திருமண திட்டத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக இரு அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜனவரி 25 ம் தேதி சமூகத் திருமண திட்டத்தின் கீழ் நடைபெற்ற திருமண நிகழ்வில்  568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்நிலையில், மணமக்களாக நடிப்பதற்கு இதில்  பலருக்கும் பணம் கொடுக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  அதன்படி மணமக்களாக தங்களைக் காட்டிக்கொள்ள ரூ.500 முதல் ரூ.2000 வரை பணம் கொடுக்கப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ கேத்கி சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடி குறித்து ”பணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே குற்றம் கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த  முழுவிசாரணையும் மேற்கொள்ள  3  பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது “ என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க