விழுப்புரத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரி கண்டுபிடிப்பு!
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் சுமாய் 5,000 ஆண்டுகள் பழமையான கற் கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் முட்டத்தூர் பகுதியில் களஆய்வு மேற்கொண்ட போது, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற் கோடாரி கண்டறியப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்குட்டுவன், “முட்டத்தூர் – கல்யாணம்பூண்டி எல்லைக்கு உட்பட்ட மலையடிவாரத்தில் கள ஆய்வு செய்தோம். அப்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற் கோடாரி கண்டறியப்பட்டது. இக்கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். வேட்டைக்கால மக்கள் வேளாண் சமூகத்துக்கு மாறிய போது இது போன்ற பட்டைத் தீட்டப்பட்ட வழுவழுப்பான கற் கோடாரிகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, உடையாநத்தம், தி.தேவனூர், பாக்கம் மலைப்பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இங்கும் அதற்கானத் தடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள எழுத்துப் பாறையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வெண் சாந்து ஓவியங்களை நாங்கள் கண்டறிந்தோம்” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!