பயங்கர வேகம்... திடீரென தீப்பிடித்த கார்... உடல் கருகி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் இன்று காலை சொகுசு பேருந்து ஒன்றின் மீது பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் மோதியதில், பேருந்து நிலைதடுமாறி சாலையின் செண்டர் மீடியனில் மோதி தீப்பிடித்தது.உடன் மோதிய காரும் தீப்பிடித்து எரிந்ததில், காரில் பயணித்த 5 பேரும் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.
பயங்கர வேகத்தில் கார் மோதியதில், ஆம்னி பேருந்து நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் இரு வாகனங்களிலுமே தீ பரவியது. இதில் காரில் பயணித்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்ததும் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் விரைந்து கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.