கேரளாவிற்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் 4 பேர் பலி.. 30 அடி பள்ளத்தில் வேன் கவிழந்து கோர விபத்து!

 

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரஷர் குக்கர் நிறுவனம் அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 15க்கும் மேற்பட்டோர் வேனில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் கேரளாவில் உள்ள மூணாறு மற்றும் ஆனைகுளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் வீடு திரும்பினர்.

நேற்று மாலை இடுக்கி மாவட்டம் மாங்குளம் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரம் உள்ள 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து இடுக்கி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் அபினேஷ் மூர்த்தி (40), அவரது ஒரு வயது மகன் தன்விக், தேனியைச் சேர்ந்த குணசேந்திரன் (71), ஈரோட்டைச் சேர்ந்த பி.கே.சேது என்பது தெரிய வந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்