undefined

 கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போராசிரியர் உட்பட 4 பேர் கைது!

 
 

சமீப காலங்களாக பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு பாலியல் தொல்லைத் தரும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம், திருச்சி என்.ஐ.டி. கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை, திருப்பத்தூரில் விடுதியறையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை என்று தினந்தோறும் ஏதோவொரு மாவட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லைத் தரும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையிலும் கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோயம்புத்தூர் வால்பாறை பகுதியில் அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை  அளித்ததாக கூறப்பட்ட புகாரில்,  கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் உட்பட  4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் வெளியூர்  மாணவிகள் வால்பாறை அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருந்தபடியே கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி  ஒருங்கிணைந்த  சேவை மைய குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வால்பாறை அரசு கலைக்கல்லூரிக்கு சென்றனர்.

விழிப்புணர்வு நிகழ்வின்  போது, மாணவிகளிடம் பாலியல் ரீதியில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா,  படிக்கும் இடத்தில், சமுதாயத்தில் ஏதேனும்  தொந்தரவு உள்ளதா போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர்.அப்போது சேவை மையக் குழுவினரிடம் கல்லூரியில் படித்து வரும் 7 மாணவிகள், இந்த  கல்லூரியில் பணியாற்றி வரும் 2 தற்காலிக பேராசிரியர்கள் ஆய்வுக்கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் ஆகியோர் தங்களிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக  பேசுவது, மொபைல்போனுக்கு  ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

மாணவிகளின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழுவினர்,  வால்பாறை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் வால்பாறை போலீசார் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரிய வந்தது. இதில் தற்காலிக பேராசிரியர்கள் 2 பேர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் ஒருவர் மற்றும் என்சிசி பயிற்சியாளர் ஒருவர் என 4 பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதையடுத்து, அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை