39 பேர் பலி; 360 பேர் படுகாயம்... கென்யாவில் வெடித்தது கலவரம்... அரசுக்கெதிராக மக்கள் போராட்டம்!
இது தொடர்பாக கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம் (KNCHR) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளது. கென்யா நாடாளுமன்றத்தில் இயற்றப்பட இருந்த புதிய வரி உயர்வு தொடர்பான சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை வெளியிட்டது.
அதில் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் உயிரிழந்ததாகவும் 361 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 18-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதே காலக்கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 32 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், 627 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!