வரி உயர்வால் மக்கள் போராட்டம்... 39 பேர் பலி... 360 பேர் படுகாயம்!

 
 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது.ஜூன் 18 முதல் ஜூலை 1-ம் தேதி வரையிலான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

பாதுகாப்பு படைகளை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது என கென்ய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.கென்யா கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. வெளிநாட்டு கடனும் உச்சத்தில் உள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர வரிகளை உயர்த்த அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் உள்ள நிலையில்,  இந்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!