undefined

3320 குழந்தைகள் பலி... இஸ்ரேல் ஹமாஸ் போரில் கொடூரத்தின் உச்சம்!!

 

இஸ்ரேல்  பாலஸ்தீனம் இடையே அக்டோபர் 7ம் தேதி  திடீரென போர் தொடங்கியது. பொதுமக்களை பற்றி கவலை இல்லாமல் இரு நாடுகளும் தாக்குதல்களை தொடர்ந்தன.  லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர்.அங்கு வசிக்கும் மக்களில்  பலர் குடிநீர் உணவு இன்றி தவித்து வருகின்றனர். பல நாடுகள் போர் நிறுத்தக் கூறியும் இருநாடுகளும் கண்டு கொள்வதாக இல்லை என்பது தான் வேதனையின் உச்சம். இதில் பல அப்பாவி பொதுமக்கள், பெண்கள் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். பெண்களுக்குஎ திரான கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன. ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8 119 பேர் உயிரிழந்துள்ளனர்.  பலியானவர்களில்  3320 குழந்தைகள்  என்பது கொடூரத்தின் உச்சம்.  மேலும் 20,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் போர் விதிமுறைகளையும் மீறி தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டராக அசம் அபு ரகபா செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் அசம் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்கள் மீது பாராகிளைடர்கள், ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக செயல்பட்டார்.

இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட்டை சேர்ந்த உளவாளிகள், காசா பகுதியில் அவரை மிக தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு வடக்கு காசாவின் ரகசிய சுரங்கப் பாதையில் அசம் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டர் அசம் அபு ரகபா உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

மேலும் ஹமாஸின் 150 சுரங்கப் பாதைகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. இதில் காசா பகுதியின் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் முழுமையாக தகர்க்கப்பட்டன.

இதுதொடர்பாக ஐ.நா. சபையின் உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர்சிண்டி மெக்கைன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தொலைத்தொடர்பு, இணைய சேவை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. அங்கு பணியாற்றும் எங்களது ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. காசாவில் பணியாற்றும் ஐ.நா. சபை ஊழியர்கள், தன்னார்வலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது" என்று தெரிவித்தார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!