இந்தியா முழுவதும் 3000 புதிய  ரயில்கள் ... அதிரடி அறிவிப்பு...!!

 

இந்தியா முழுவதும் மக்களின் தேவைகளின் அடிப்படையில்  ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எத்தனை ரயில்கள் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மக்கள் தொகை பெருக்கத்தால் எப்போதும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. இதனை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனோ காலகட்டத்துக்கு முன்பு வரை  இந்தியா முழுவதும் 10,186 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த  நிலையில் தற்போது நாடு முழுவதும் 10,748 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுக்கு 800 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடியாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்கள் போதுமானதாக இல்லை என மக்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால்  ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகின்றன.  இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளை உறுதி செய்யவும் இன்னும் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் 3,000 புதிய எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.   அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!