கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய 3 இளைஞர்கள் கைது!
தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் அதிகளவில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். பல குற்றச்செயல்களின் பின்னணியிலும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில் திருவள்ளூர் ஆவடியை அடுத்துள்ள இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா போதையில் அந்த வழியே வந்த பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியது குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கைது செய்துள்ளா சுபாஷ் (20), இப்ராஹிம் (23) மற்றும் 14வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் நடைமேடையில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த போது கஞ்சா போதையில் 4 இளைஞர்கள் கையில் உருட்டுக்கட்டைகள், பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றை வைத்துக்கொண்டு தரையில் தட்டியபடியும், ரயில் நிலையத்தில் இருந்த இரும்பு கம்பிகளை அடித்தபடியும் சென்றனர்.
நடைமேடையில் இருந்த சில பயணிகளையும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையில் தாக்கினர். இதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!