டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டணை உறுதி... பெண் எஸ்.பி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!  

 



பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.



இதனை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.பலமுறை வாதாட கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவரது தரப்பில் ஆஜராகி வாதாடவில்லை. அதைதொடர்ந்து நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் 5 நாட்கள் ஆஜராகி வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இந்த வழக்கு பிப்ரவரி 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தனது வாதத்தை முன் வைத்தார். அன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பு வாதம் நிறைவடைந்தது.இந்நிலையில், இதன் தீர்ப்பு 12ம் தேதி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது முன்னர் வழங்கிய தீர்ப்பு செல்லும் என உறுதி செய்தது இந்நிலையில் ராஜேஸ்தாஸ் உட்பட எவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க