undefined

அதிகாலையில் அதிர்ச்சி...  லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் உடல் நசுங்கி பலி... 14 பேர் படுகாயம்!

 

 தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாய பணிக்கு சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த லோடு ஆட்டோ திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைகுளம் பகுதிக்கு விவசாய பணிக்கு சென்று கொண்டிருந்ததாகவும், அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக  இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

ஆட்டோவின் குறுக்கே நாய் வந்ததால் வண்டியை ஓட்டுநர் திருப்ப முயற்சித்தபோது லோடு ஆட்டோ கவிழ்ந்து விட்டதாக பயணித்தவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவத்தில் லோடு ஆட்டோவில் இருந்த அதே இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக 3 பெண்கள் பலியாகினர். மேலும் அதில் பயணம் செய்த 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறை உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது. அதே நேரத்தில் விபத்தில் படுகாயமடைந்த 14 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை