undefined

 அதிர்ச்சி... கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

 
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி வெங்கடேசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், தனிப்படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சங்கலிங்கபுரம் பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 

அங்குள்ள 4-வது தெருவில் உள்ள கிணற்றின் அருகில் சென்ற உட்கார்ந்திருந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்று சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

விசாரணையில், சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த கோட்டியப்பன் மகன் மதன்குமார் (24) மற்றும் 14 வயது, 17 வயது சிறுவர்கள் எனவும், 3 பேரும் கூலித்தொழிலாளர்கள் என்றும், அப்பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து தனிப்படைபோலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!