undefined

 அதிர்ச்சி... தமிழகத்தில் புதிதாக 3 சுங்கச்சாவடிகள் அறிவிப்பு...ரூ.60 முதல் ரூ.400 வரை கட்டணம் நிர்ணயம்!

 
 

தமிழகத்தில் ஏற்கெனவே அதிகளவில் சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதாக எதிர்ப்பு குரல்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும் பொதுமக்களிடையே அதிருப்தி குரல்கள் ஒலித்தன.

ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் போது சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணங்களும், பேருந்து கட்டணமும் உயர்கிறது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் புதிதாக  3 இடங்களில் சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் புதிதாக 3 சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. காரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. நங்கிளி கொண்டான், நாகம்பட்டியில் ஒருமுறை சென்று வர கட்டணமாக ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை