3 மாத இ.எம்.ஐ நிலுவை.. வீட்டுச் சுவரில் கடன் பாக்கி என எழுதி அட்ராசிட்டி செய்த நிதி நிறுவனம்!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள வத்தனாக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணன் - மூக்காயி தம்பதியின் மூத்த மகன் சக்திவேல் (45), முத்துக்குமார் (38) ஆகியோர் விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்த்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர். சக்திவேல் தனியார் நிதி நிறுவனத்தில் இடத்தை அடமானம் வைத்து ரூ.7.50 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இவரது தம்பி முத்துக்குமாரும் வேறு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை இருவரும் முறையாக செலுத்தி வரும் நிலையில், தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், கடந்த மூன்று மாத கால நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது. மூன்று மாதங்களாக இஎம்ஐ செலுத்தாததால், பணம் வாங்க வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், தங்கள் நிறுவனத்தில் இடத்தை அடமானம் வைத்துள்ளதாக எழுதி வைத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாய சகோதரர்கள் இருவரும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள், இதுபோன்ற விதிமீறல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!