பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ3லட்சம் நிவாரணத் தொகை... முதல்வர் அறிவிப்பு !

 

 இந்தியாவில் பட்டாசு தயாரிப்புக்களுக்கு பெயர் போன ஊர் சிவகாசி. தான். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு அனுமதியின்றி பல பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை முறைப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சரியான வகையில் பாதுகாப்பின்றி பட்டாசுகள் தயாரித்தல் முறையாக குடோன்களை அமைக்காதது, திடீர் மின் கசிவு என பல வகையில் அடுத்தடுத்து வெடிவிபத்து ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சூழல் வழக்கமாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் விருதுநகரில் காளையார்குறிச்சியில் செயல்பட்டு   வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிவகாசி,விருதுநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் வெடி விபத்து சம்பவங்கள் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 இது குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும்  தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று ஜூலை 9ம் தேதி  காலை 09.15 மணிக்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில்  விருதுநகர் மாவட்டம், வெள்ளூர், சிதம்பராபுரத்தில் வசித்து வரும்  45 வயது திரு.மாரியப்பன் (வயது 45) த/பெ.பெருமாள் மற்றும் மற்றும் திரு.முத்துமுருகன் (வயது 45) த/பெ.பரமசிவம்  இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
 
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திரு.சங்கரவேல் (வயது 52) த/பெ.கூடலிங்கம் மற்றும் திருமதி.சரோஜா (வயது 50) க/பெ. கொடக்காரசின்னு  இருவருக்கும் உயர் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ3லட்சம், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சமும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என அறிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!