undefined

 அன்னை அபிராமிக்கு ரூ3 கோடியில் வெள்ளி ரதம்...   வடம்பிடித்த அமைச்சர்   சேகர்பாபு!

 


 
மயிலாடுதுறை மாவட்டத்தில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற உலகப்பிரசித்தி பெற்ற  அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர்   மூவரால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் இது. இங்கு தான் , பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். மேலும்  பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது திகழ்கிறது.  


புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாகவும்  ஆலய வரலாறு கூறுகிறது. அதன் பிறகு  மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் பிறகு பூமியின் பாரம் தாங்கமுடியாமல்  பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்க இந்த வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  இது தவிர அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது  ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே திருத்தலம் இது தான்.  இந்த கோவில்  ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பு.  

இதுபோன்ற பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் பக்தர்களின் பங்களிப்பில் ரூ 3  கோடி  மதிப்பீட்டில் புதிதாக வெள்ளி ரதம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதற்கான வெள்ளி ரதம் வெள்ளோட்டம்   விழா இன்று நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27 -வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற வெள்ளி தேர் வெள்ளோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த  வெள்ளி தேரில் ஸ்ரீ அபிராமி அம்மன் எழுந்தருள செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து புனித கடங்கள் வைக்கப்பட்டு பூரணாகுதி மகாதீபாராதனை செய்யப்பட்டு வெள்ளித் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் அன்னை அபிராமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, தேரை அமைச்சர் சேகர்பாபு, தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், ரத்தினகிரி ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் ஆகியோர்  வடம்பிடித்து இழுத்தனர். ஆலய பிரகாரத்தை வலம் வந்து வெள்ளி தேர் நிலையை அடைந்தது. முன்னதாக கோயிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!