undefined

ரூ.32 லட்சம் மதிப்புள்ள 201 செல்போன்கள் மீட்பு... பொதுமக்களிடம் வழங்கிய திருச்சி ஆணையர் சத்திய ப்ரியா!

 

திருச்சி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இருந்து தொலைந்து போன சுமார் 201 செல்போன்களை,  திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா,  உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

திருச்சி மாநகரில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுப்பதிலும் உரிய முயற்சி எடுத்து வரும் ஆணையர் சத்திய பிரியா, பொதுமக்களிடம் இருந்து செல்போன்கள் காணாமல் போனதாக வரும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க காவல் அதிகாரிகளுக்கும், ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். 

அதன் பேரில் காணாமல் போன செல்போன்கள் பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில், கண்டோன்மெண்ட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 47 செல்போன்களும், தில்லைநகர் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 45 செல்போன்களும், காந்தி மார்க்கெட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 43 செல்போன்களும், கே.கே.நகர் சரக காவல்நிலைய எல்லையில் 34 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 27 செல்போன்களும், பொன்மலை சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 3 செல்போன்களும், மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 2 செல்போன்கள் உட்பட 32 லட்சம் மதிப்புள்ள பல்வேறு கம்பெனிகளின் 201 ஆன்டிராய்டு செல்போன்கள் கண்டு பிடித்து மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மே 26ம் தேதி தொலைந்து போய் மீட்கப் பட்ட 201 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசுகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் செல்போன் இன்றியமையாத ஒன்றாக இருப்பதாகவும், செல்போனில் பல தகவல்களை சேமித்து வைத்திருப்பதால், அது தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவரவர் கடமை என்றும் அறிவுறுத்தினார்.

செல்போனை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் செல்போனை கண்டுபிடித்து தந்ததற்காக காவல் ஆணையருக்கும், காவல் துறைக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்து கொண்டார்கள். இனி திரும்ப கிடைக்கவே கிடைக்காது என்று மறந்து போன நிலையில், மீண்டும் தங்களது செல்போன்களைப் பெற்ற மகிழ்ச்சி பொதுமக்களிடையே தெரிந்தது. சிலருக்கு திருமண நாள், பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பரிசாக வந்த செல்போன் திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்