4 ஏக்கரில் 2000 மாணவர்கள் நெல் நடவு செய்து அசத்தல்.. அபுதாபி நிறுவனம் பரிசளித்து பாராட்டு..!

 
ஒரே நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நெற்பயிர்களை நடவு செய்து சாதனை பாடைத்திருக்கிறார்கள்.

 திருச்சி மாவட்டம் முசிறி  எம்.ஐ.டி. வேளாண்மை கல்லூரியில் உலக உணவுத் தினத்தை முன்னிட்டு உணவு பொருட்களை வீணடிக்க கூடாது என்பதை வலியுறுத்தி நெல் நாற்று நடவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி எம்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பயிலும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2,000 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

பதியம் செய்யப்பட்டு இருந்த நெல் நாற்றை ஒரு தரப்பு பறித்து கொடுக்க 4 ஏக்கர் பரப்பளவிலான வயலில் இறங்கி மாணவ, மாணவிகள் அதை வரிசையாக நடவு செய்தனர். முதல் முறையாக வயலில் இறங்கி நடவு செய்த் மாணவர்கள் உணவின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து இருப்பதாக தெரிவித்தனர்.

அபுதாபியை மையமாக கொண்டு செயல்படும் இஸ்டீன் உலக சாதனை விருது வழங்கும் நிறுவனம் இந்த சாதனையை பாராட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தது.