எஸ்பிஐ வங்கியில் 2000 பணியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்க...
எஸ்பிஐ வங்கி, ப்ரோபேஷனரி ஆபிசர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்:எஸ்பிஐ
மொத்தப் பணியிடங்கள் :2000
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27, 2023
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு பட்டப்படிப்பின் இறுதியாண்டு/ செமஸ்டரில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டால், டிசம்பர் 31, 2023 அல்லது அதற்கு முன் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்
வயது : 21 வயது முதல் 30 வரை
தேர்வு செயல்முறை : முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சைக்கோமெட்ரிக் தேர்வு, குழுப் பயிற்சி மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கட்டம்-II மற்றும் கட்டம்-III இரண்டிலும் தனித்தனியாக தகுதி பெற வேண்டும். முதன்மைத் தேர்வில் , குறிக்கோள் தேர்வு மற்றும் விளக்கத் தேர்வு ஆகிய இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். கட்டம்-III இல் பெற்ற மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்களுக்கு 750/
SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!