அதிர்ச்சி... மகளிர் இலவச பேருந்தில் டிக்கெட் எடுக்காத பெண்ணிடம் ரூ.200 அபராதம் வசூல்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நேற்று திருப்பூர் - புளியம்பட்டி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தில் தெற்குபாளையம் பிரிவில், ஒரு பெண் ஏறி இருக்கிறார். அந்த பேருந்து மகளிர் இலவச பேருந்து என்பதால் அவர் பேருந்தில் டிக்கெட் வாங்கவில்லை.
இந்நிலையில் பேருந்தில் இருந்து பல்லடம் பேருந்து நிறுத்தத்தில் அவர் கீழே இறங்கிய போது, அவர் டிக்கெட் வாங்காதது குறித்து டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணிடம் கேட்டார். பேருந்தில் நான் ஏறியதில் இருந்து ஆண்கள் பகுதியிலேயே நடத்துனர் இருந்ததால் டிக்கெட் எடுப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது என்று அந்த பெண் கூறிய நிலையில், இதனை ஏற்க மறுத்த பரிசோதகர் அந்த பெண்மணியிடம் ரூ.200 அபராதம் விதித்துள்ளார்.
என்னிடம் ரொக்கமாக ரூ.200 கிடையாது என்று அந்த பெண் கூறியதைத் தொடர்ந்து அவரிடம் பேருந்து நடத்துனரின் 'ஜி பே' எண்ணுக்கு அபராத தொகை ரூ.200 அனுப்பச் சொல்லி டிக்கெட் பரிசோதகர் கூறியுள்ளார்.இதனையடுத்து ரூ.200 அனுப்பிய அந்த பெண், ‘இதுக்கு டிக்கெட் எடுத்தே வந்திருப்பேன். எதுக்கு இலவச பேருந்து எனக் கூறி விடுறீங்க? அப்புறமா அபராதம் வசூலிக்கறீங்க?’ என்று புலம்பியபடியே அங்கிருந்து சென்றுள்ளார்.
இது குறித்து டிக்கெட் பரிசோதகர் செந்தில்வேலனிடம் கேட்டதற்கு, ''மகளிர்க்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்றாலும், டிக்கெட் வாங்க வேண்டியது அவசியம். நடத்துநரிடம் டிக்கெட் வாங்காமல் , செல்போனில் அவர் பிஸியாக இருந்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை ஜிபே மூலம் செலுத்திய அப்பெண் ரசீது பெறாமல் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். நடத்துநர் வசூலித்த ரூ.200 அபராத தொகை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. நடத்துனரிடம் அபராதம் வசூலித்ததற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!