undefined

அதிர்ச்சி.. கார் ஷெட்டில் காணாமல் போன 20 பேட்டரிகள். பூனை போல் பதுங்கி ஆட்டைய போட்ட கொள்ளையன்..!

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் லோகநாதன் (40) செந்தில்குமார் (37) ஆகிய இருவரும் நாட்றம்பள்ளி அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பூபதி கவுண்டர் தெரு பகுதியில் அருகில் கார் பழுது பார்க்கும் கார் செட் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அவர்களது கார் ஷெட்டில் இரவு நேரத்தில் வாட்ச்மேன்கள் இருந்தும்  அவ்வப்போது 18 பேட்டரிகள் காணாமல் போய் உள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷெட் உரிமையாளர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் சி.சி.டி.வி பொருத்தி உள்ளனர். இந்த நிலையிலும் லோகநாதனின் கார் செட்டில் இரண்டு பேட்டரிகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து கார் செட்டின் உரிமையாளர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் கார் செட்டில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அங்கும் இங்கும் மறைந்து திரிந்து பூனை போல பேட்டரிகளை மர்ம நபர் திருடி செல்லும் காட்சி பதிவானதை வைத்து மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இதுவரை சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 பேட்டரிகளை மர்ம நபர் திருடி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்