undefined

நாளை தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்... பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பு!

 


 
இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் புதிதாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில்  டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் & மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நாளை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதே போல் மீரட் – லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


நாளை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் வந்தே பாரத் ஸ்பெஷலின் தொடக்க சேவையின் அட்டவணை/நேரங்கள்: 
ரயில் எண். 02627 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் தொடக்க சிறப்பு ரயில், நாளை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் 21.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். ரயில் எண். 02627 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்களின் நிறுத்தங்கள் மற்றும் விரிவான நேரங்கள்  
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வழியாக தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவிலை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதே போல் மதுரையில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயிலின் கொடியேற்றும் நிகழ்வில் ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை அமைச்சர் வி.சோமண்ணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 
மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் பாரத் சிறப்புத் தொடக்க சேவையின் அட்டவணை:  20671 / 20672 என்ற மதுரை – பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகள் உடன் 6 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அவை திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் நிறுத்தங்களில் நின்று செல்லும்.  வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர்த்து மீதமுள்ள  6 நாட்களும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.