குரங்கு காய்ச்சலால் 2 பேர் பலி... 49 பேருக்கு பாதிப்பு... சுகாதாரத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்... !
தமிழகத்தின் அண்டை மாநிலமாம் கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரவாமல் தடுக்க அம்மாநில சுகாதாரத் துறை பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் 2 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஷிவமொக்கா மாவட்டத்தின் ஹோசநகர் தாலுகாவில் ஜனவரி 8ம் தேதி ‘குரங்கு காய்ச்சல்’ காய்ச்சல் காரணமாக 18 வயது சிறுமி உயிரிழந்தார். அதே போல் உடுப்பி மாவட்டம், மணிப்பாலில் சிக்கமகளூருவில் உள்ள சிருங்கேரி தாலுகாவில் வசித்து வரும் 79 வயது முதியவர் உயிரிழந்தார்.
இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குரங்கு வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நெறிமுறைகளை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் 49 பேருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் டி ரன்தீப் நேரில் வந்து ஆய்வு செய்து வருகிறார். நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் பரவலைத் தடுக்க பாதிக்கப்பட்ட மாவட்டங்களுடன் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லை . இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், நோய் தாக்கும் அபாயம் அதிகம் . இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரங்குகளில் உயிர்வாழும் உண்ணிகள் மனிதர்களை கடித்து மனிதர்களைக் கடிக்கும்போது, அது தொற்றுநோயை ஏற்படுத்தி விடுகிறது. உண்ணி கடித்த கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமும் மனிதர்களுக்கும் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது என்பது உறுதி . குரங்கு காய்ச்சலில் அறிகுறிகளாக குளிர் காய்ச்சல், உடல் வெப்பநிலையில் திடீர் உயர்வு , தீராத தலைவலி, உடல் வலி, தசை வலி, முதுகுவலி, இருமல், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம். குரங்கு காய்ச்சலுக்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க