தமிழகம் முழுவதும் 2,00,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடக்கம்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் புதிய ரேஷன்கார்டுகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதே போல் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெயர் சேர்க்கவும் விண்ணப்பங்கள் வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டன. இதனையடுத்து 2 பணிகளும் மீண்டும் செயல்படத் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் புதிய ரேஷன்கார்டுகளுக்காக விண்ணப்பித்திருந்த 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை ”புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2,00,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து இருப்பதால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசின் பணிகள் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்திருந்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!