191 குழந்தைகள் கொடூர கொலை.. கென்யாவில் அரங்கேறிய கொடூரம்!

 

நாகரீகம், தொழில்நுட்பம் எத்தனையோ வளர்ச்சியை கண்டுவிட்ட பிறகும் இன்னும் உலகின் பல பகுதிகளில் மூட நம்பிக்கைகளால்  வாழ்வை சீரழித்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் அமைந்துள்ள கடலோர நகரமான மலிண்டி இயற்கை எழில் வாய்ந்தது. இங்கு வசிக்கும் மக்கள்    குட் நியூஸ் சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின்பாதிரியாரான பால் மெக்கன்சியை கண்மூடித்தனமாக நம்பி வந்தனர்.  அவர் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருந்தனர். சாப்பிடாதே என்றால் சாப்பிடாமல் இருந்தனர். பட்டினி கிட நேராக சொர்க்கத்திற்கு போகலாம்.

தேவன் உன்னை வரவேற்க காத்திருக்கிறார் எனக் கூறினால் பட்டினி கிடந்தனர். இந்த தேவாலயம் 800 ஏக்கர் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பல மர்மங்கள் நிறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விசாரணைக்கு சென்ற போலீசார் தோண்டியதில் சுமார் 90க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.   15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றினர். அவர்களில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.  அதே நேரத்தில்  பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது  அவர் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். மேலும்   800 ஏக்கர் வன பகுதி  மூடி சீல் வைக்கப்பட்டது.   மெக்கன்சிக்கு எதிராக மலிண்டி ஐகோர்ட்டில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது.  இதில் மெக்கன்சி மற்றும் அவருடன் தொடர்புடைய   29 நபர்களுக்குஎதிராக குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   அவர்கள் அனைவரும் எந்த குற்றமும் செய்யவில்லை என  ஒரே மாதிரியாக  மறுப்பு தெரிவித்து வருகின்றனர்

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க