கின்னஸ் சாதனை...  180 அடி நீளமான சைக்கிள்... வைரல் வீடியோ!

 

 அடுத்த தெருவில் உள்ள கடைக்கு போக வேண்டுமானால் கூட சக்கரங்களில் பயணிக்க பழகி விட்டனர். செலவே இல்லாத சக்கரங்கள் உடைய வாகனம் சைக்கிள் தான். அந்த வகையில் உலகின் நீளமான சைக்கிளை டச்சு பொறியாளர்கள் 8 பேர் சேர்ந்து கண்டுபிடித்தனர். இந்த சைக்கிள் 180 அடி நீளம். இதனால் தற்போது உலகின் மிக நீளமான சைக்கிள் என்ற பெருமையை பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் வசித்து வரும்  பெர்னி ரியான் என்பவர் கண்டுபிடித்த 155 அடி நீளம் உள்ள  சைக்கிள் தான் நீளமான சைக்கிள்  என்ற பெருமையை பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது.  ஆனால் தற்போது இந்த சாதனையை டச்சு பொறியாளர்கள் முறியடித்துள்ளனர்.  38 வயது இவான் ஷால்க்  என்ற பொறியாளர் சிறுவயது முதலே பெரிய சைக்கிளை உருவாக்க வேண்டும் என்ற ஆசையும், கனவும் உடையவராக இருந்தார்.

அவர் கனவு கண்ட சைக்கிளை தான் இந்த குழுவில் உள்ள இவான் ஷால்க் வடிவமைத்துள்ளார்.  கடந்த 60 வருடங்களில் உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை ஏற்கனவே பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.  ஜெர்மனியில்  1965 ம் ஆண்டு 26 அடி நீளம் உள்ள சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தான்‌ உலகின் முதல் நீளமான சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!