undefined

18 படி  மெகா சைஸ் கொழுக்கட்டை!! முக்குறுணி பிள்ளையாரை காண குவிந்த மக்கள்!! 

 

இன்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி அவரவர் வழக்கப்படி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கோவில்களில் விடுமுறை தினம் என்பதால் கூட்டல் குவிந்து வருகிறது.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு  மெகா சைஸில் கொழுக்கட்டை படைக்கப்பட உள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். திருமலை நாயக்கர் மன்னர் அரண்மனை கட்டுவதற்காக தெப்பக்குளம் பகுதியில் தோண்டும் போது 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கிடைத்தது.


சிலையை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வழக்கமாக, விநாயகர் சதுர்த்தி அன்று முக்குறுணி விநாயகருக்கு 18 படியால் ஆன பெரிய கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது . செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று முதலே அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கப்படுகிறது. அதே போல் மதுரை முழுவதும் வெவ்வேறு இடங்களில் 350க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.


ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நகரில் 15000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.   சிலைகளை பாதுகாப்பாக ஆற்றில் கரைப்பது வரை  கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில்  தீவிரமாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே 24 மணி நேரமும் தீவிர பணியை மேற்கொண்டுள்ளனர். முக்குறுணி விநாயகரை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம்  குவிய தொடங்கியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை