undefined

வாடகை கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூல்... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 

வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதித்து பெரும் சுமையை வணிகர்கள் தலையில் ஏற்றும் மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள், கடை வாடகை தொகையில் 18 சதவிகிதத்தை ஜி.எஸ்.டி வரியாக மாதந்தோறும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23ம் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வாடகைக் கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சரிவில் இருந்து வணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்ற இந்த வேளையில், வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி எனும் பெரும் சுமையை அவர்கள் தலையில் ஏற்றும் ஒன்றிய அரசுக்கு எனது கடும் கண்டனம். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த வாடகைக் கட்டடங்களுக்கான 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசையும் , உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!