பொண்ணு கொடுங்க சாமியோவ்.... 160 கிமீ  இளைஞர்கள் திருமணத்திற்காக பாதயாத்திரை  !!

 

இன்றைய இளைஞர்களுக்கு  திருமணத்திற்கு பெண் கிடைப்பது பெரும் குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது.    திருமண விஷயங்களை பொறுத்தவரை  பெண்களின் எதிர்பார்ப்பு எகிற தொடங்கி உள்ளது. பெண்கள் தங்களது வருங்கால கணவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் சொந்த கார், வீடு என ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவராக இருக்க வேண்டும் என  எதிர்பார்க்கின்றனர். இதனால்  நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணத்திற்குபெண் கிடைப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.  

கர்நாடக   மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. விவசாயம் செய்வதால் பெண்கள் தங்களை ஏளனமாக பார்ப்பதாகவும் தங்களை திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக கர்நாடகா கோடஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் திருமணமாகாத  இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து சுமார்  160 கி.மீ தூரத்தில் உள்ள மாதேஸ்வரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர்.

தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்க வேண்டும் என வழிபாடு செய்து கொண்டனர்.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்ட  இளைஞர்கள், திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!