undefined

கோத்தகிரியில் பரபரப்பு... கடமானை வேட்டையாடிய 15 பேர் கைது!

 

 தமிழகத்தில்  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடிய எஸ்டேட் மேலாளர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறையினர் இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த பொம்மன் (23) என்பவரை நிறுத்தி அவரது வாகனத்தைச் சோதனை செய்தனர். அதில், கடமான் இறைச்சி வாகனத்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்து, பொம்மனை சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். 

 

சத்தியமங்கலம் வனத்துறையினர் பொம்மனிடம் விசாரணை மேற்கொண்டதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மார்வாளா தனியார் எஸ்டேட் பகுதியில் கடமனை வேட்டையாடியது தெரிய வந்தது. இதனையடுத்து சத்தியமங்கலம் வனத்துறையினர் பொம்மனை நீலகிரி மாவட்ட வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். அவர்கள் பொம்மனிடம் விசாரணை மேற்கொண்டதில் சுருக்கு கம்பி வைத்து கடமனை வேட்டையாடியதாகவும், அதன் இறைச்சியை உறவினருக்கு எடுத்துச் செல்லும் வழியில் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து கடமான் வேட்டையில் பொம்மனுடன் தொடர்புடைய ஹாசனூர் பகுதியை சேர்ந்த  அர்ஜுனன்(38), ஆட்டுக்குமார்(70), அழகன்(60), ஜடைசாமி(45), ஜடையப்பன்(47), ஜான் பிரகாஷ்(24), சந்தோஷ்(28), சின்னப்பன்(43), ஜார்ஜ்(41), மாதப்பன்(29), பசவன்(26), சடையப்பெருமாள்(40), மேஸ்திரி குமார்(44), எஸ்டேட் மேலாளர் சுனில் குமார்(49) ஆகிய 15 பேரை வனத்துறையினர் கைது செய்து  கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை