undefined

 திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து - தனியார் பேருந்து-மினிலாரி மோதி விபத்து... 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
 தமிழகத்தில்  சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்த பலரும் சென்னையை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அரசு பேருந்து, தனியார் பேருந்து, மினி லாரி என அடுத்தடுத்து 3 வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட இந்த  விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் அடுத்தடுத்து மூன்று வாகனங்களும் மோதிக் கொண்டதில்  சுமார்  3 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விடுமுறை முடிந்து வார இறுதி நாளில் பலரும் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து, தனியார் பேருந்து, ஒரு மினி லாரி என 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உளுந்தூர்பேட்டை அருகே சர்வீஸ் சாலையில் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. அதிகாலை வேளையில் நடந்த இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை