குடையோடு கிளம்புங்க... அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் காற்று அதிவேகமாக வீசும் எனவும், நவம்பர் 30ம் தேதி நாளை சனிக்கிழமை கரையை கடக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 15 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது