undefined

தமிழகம் முழுவதும் இந்த மாதம்  9 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிப்பு!

 

நாடு முழுவதும் பொது மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில், அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. \

அதன்படி, தமிழகத்தில் 9 நாட்கள் வங்கி விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு தங்கள் வங்கிப் பணிகளை திட்டமிட்டு கொள்ளலாம். 

பொதுவாக, நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் , 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகள் என வார இறுதி நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த பட்டியலில் திருவிழாக்கள், தேசிய விடுமுறைகளும் இடம்பெற்றுள்ளது.\

அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்கள்  பட்டியல்
அக்டோபர் 2 : காந்தி ஜெயந்தி
அக்டோபர் 6 : ஞாயிற்றுக்கிழமை : வார விடுமுறை
அக்டோபர் 11: வெள்ளிக்கிழமை - ஆயுத பூஜை


அக்டோபர் 12 : 2வது சனிக்கிழமை 
அக்டோபர் 13 : ஞாயிற்றுக்கிழமை   
அக்டோபர் 20 : ஞாயிற்றுக்கிழமை 
அக்டோபர் 26 : 4 வது சனிக்கிழமை
அக்டோபர் 27 : ஞாயிற்றுக்கிழமை 
அக்டோபர் 31 : வியாழக்கிழமை தீபாவளி 

இந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் UPI, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.   இந்தச் சேவைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது இடையூறு ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!