பெரும் அதிர்ச்சி..   1,448 சிறுமிகளுக்கு 18 வயதுக்கு முன்பே குழந்தை!

 

நெல்லை மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் அக்டோபர் 2023 வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 18 வயதுக்குட்பட்ட 1448 சிறுமிகள் 34 மாதங்களில் 1448 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

 

மேலப்பாளையம் நகர் நல மையத்தில் மட்டும் அதிகபட்சமாக 88 பெண் குழந்தைகள் பிறந்தன. மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 44 குழந்தைகளும், வன்னி கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 43 குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் படிப்பை இடைநிறுத்துவதுதான் இதற்குப் பெரிய காரணம் என்று கூறப்படுகிறது. 18 வயதிற்கு முன்பே திருமணம் நடத்தப்படுவதும் சிறுவயது குழந்தை பேருக்கு காரணமாக அமைகிறது.

பள்ளி, கல்லூரிகளில் இடைநிற்றல் விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு வாரக்கணக்கில் வராத சிறுமிகள் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, 18 வயதுக்கு முன் பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணங்களை தடுக்கப்படுகிறது. ஆனால் காதல் திருமணங்கள் தடுக்க முடியவில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம் தெரிவித்துள்ளார்.