இன்று மாலை 6 மணி முதல் 2 நாட்களுக்கு 144 தடை ... கலெக்டர் திடீர் உத்தரவு!

 

 தூத்துக்குடி மாவட்டத்தில்  ஆண்டுதோறும் நடைபெறும் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா பிரசித்தி பெற்றது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளையும், மறுநாளும்  வீரசக்கதேவி ஆலய திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக விழா நடைபெறும் வகையில்  சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், இன்று மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்  தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவுக்கு  அழைத்து வரவும்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னிபேருந்துகளுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து  விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையிடம்  முன் அனுமதி பெற வேண்டும்.  இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!